இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை (Corona Second Wave) கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. எனினும் உலகெங்கிலும் பல இடங்களில் டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவல் குறித்த தகவல்கள் வருகின்றன. இந்நிலையில், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட வெளிநாட்டு விமான சேவை மீதான தடையை ஜூலை 31 வரை நீட்டித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது
இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இன்று (ஜூன் 30, புதன்கிழமை) சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த சுற்றறிக்கையில், வெளிநாடுகளுக்கான சரக்கு மற்றும் பயணிகள் விமான சேவை மீதான தடை வரும் ஜூலை 31 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொரோனா பரவல் (Corona Pandemic) காரணமாக ரத்து செய்யப்பட்ட வெளிநாட்டு விமான சேவைகள், 15 மாதங்களுக்குப் பின் இன்றுடன் ஜூன் 30ம் தேதிக்கு பிறகு தொடங்கப்படுவதாக இருந்தது
இருப்பினும் விமான போக்குவரத்துக்கான ஒப்பந்தங்கள் உள்ள நாடுகளுக்கு இடையே குறிப்பிட்ட அளவில், பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குறிப்பிட்ட சில வழித்தடங்களில், உரிய அனுமதியுடன், சில சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.