Home கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் முகக் கவசம் அணிதல் குறித்து புதிய நடைமுறை

பிரிட்டிஷ் கொலம்பியாவில் முகக் கவசம் அணிதல் குறித்து புதிய நடைமுறை

by Jey

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் முகக் கவசம் அணிவது தொடர்பில் புதிய நடைமுறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் ஒன்று கூடும் உள்ளக இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொவிட் பெருந்தொற்று நிலைமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முகக் கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மக்கள் ஒன்றுகூடும் பொது இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கொவிட் தடுப்பூசியின் இரண்டு மருந்தளவுகளை ஏற்றிக் கொண்டு பதினான்கு நாட்கள் கடந்தவர்கள் இவ்வாறு முகக் கவசம் அணிய வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் முதல் மாகாணத்தில் இந்தநடைமுறை அறிமுகம் செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களும் முகக் கவசம் அணிய வேண்டுமெனவும் டெல்டா திரிபிலிருந்து பாதுகாத்துக் கொள்ள இவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட வேண்டுமெனவும் உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

related posts