ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், LPG சிலிண்டர்களின் விலையை அரசாங்கம் மாற்றுகிறது. அந்த வகையில் LPG கேஸ் சிலிண்டரின் 25 ரூபாய் உயர்ந்துள்ளது.
எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் ஜூலை மாதத்திற்கான எரிவாயு விலையை வெளியிட்டுள்ளன. அதன்படி வர்த்தகம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை (LPG Cylinder) உயர்ந்துள்ளது. முன்னதாக மே மற்றும் ஜூன் மாதங்களில் உள்நாட்டு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஏப்ரல் மாதத்தில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .10 குறைக்கப்பட்டது. இன்று டெல்லியில் எல்பிஜி சிலிண்டரின் விலை (LPG Cylinder Hike) ரூ .834 ஆக உள்ளது. டெல்லியில் எல்பிஜி சிலிண்டரின் விலை இந்த ஆண்டு ஜனவரியில் ரூ .694 ஆக இருந்தது, இது பிப்ரவரியில் சிலிண்டருக்கு ரூ .719 ஆக உயர்த்தப்பட்டது.
பிப்ரவரி 15 ஆம் தேதி விலை ரூ .769 ஆக உயர்த்தப்பட்டது. இதன் பின்னர், பிப்ரவரி 25 ஆம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .774 ஆக குறைக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ .819 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
14 KG எல்பிஜி சிலிண்டர் விலை
மாதம் டெல்லி கொல்கத்தா மும்பை சென்னை
ஜூலை 1, 2021 834 861 834.5 850
ஜூன் 1, 2021 809 835.5 809 825
மே 1, 2021 809 835.5 809 825
ஏப்ரல் 1, 2021 809 835.5 809 825
மார்ச் 1 , 2021 819 845.5 819 835
பிப்ரவரி 25 , 2021 794 820.5 794 810
பிப்ரவரி 15 , 2021 769 795.5 769 785
பிப்ரவரி 4 , 2021 719 745.5 719 735
ஜனவரி 1 , 2021 694 720.5 694 710
டிசம்பர் 15 , 2020 694 720.5 694 710
டிசம்பர் 02 , 2020 644 670.5 644 660
நவம்பர் 01 , 2020 594 620.5 594 610
அக்டோபர் 01 , 2020 594 620.5 594 610
19 கிலோ சிலிண்டரின் விலையும் அதிகரித்தது
ஜூன் 1 ம் தேதி டெல்லியில் 19 கிலோ சிலிண்டர் விலை ரூ .122 குறைக்கப்பட்டது. ஆனால், இந்த மாதம் அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயிலின் வலைத்தளத்தின்படி, டெல்லியில் 19 கிலோ சிலிண்டர் விலை ரூ .1473.5 லிருந்து ரூ .1550 ஆக உயர்ந்துள்ளது.