பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஐந்து நாட்களில் 486 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணத்தில் கடுமையான வெப்பநிலை நீடித்து வரும் நிலையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வழமையாக குறித்த காலப் பகுதியில் பதிவாகும் மரணங்களை விடவும் மூன்று மடங்கு அதிகளவில் மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திடீர் மரணங்களுக்கான பிரதான ஏதுவாக அதிகளவான வெப்பநிலையை கருதுவதாக மாகாணத்தின் பிரதம திடீர் மரண பரிசோதகர் லிசா லாபொயின்ட் தெரிவித்துள்ளார்.
இந்த மரணங்கள் தொடர்பில் பரிசோதனை செய்து வெப்பத்தினால் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதா என்பது உறுதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வரலாறு காணாத அளவில் கடுமையான வெளிப்பநிலைமை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.