ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அபாயம் அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பாவில் கடந்த இரண்டு மாதங்களாக எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்றாளரும் அடையாளன் காணப்படாத நிலையில், மீண்டும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஐரோப்பாவில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம், மாறுபட்ட கொரோனா வைரஸ் மற்றும் சுகாதார விதிமுறைகள் பின்பற்றப்படாமை உள்ளிட்ட காரணங்களினால் இவ்வாறு ஆபத்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.