Home இந்தியா தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

by Jey

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. எனினும், சில மாவட்டங்களில் மீண்டும் தொற்றின் அளவு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இந்த திடீர் அதிகரிப்பின் காரணத்தால் மக்கள் மற்றும் நிர்வாகத்திடம் மீண்டும் அச்சம் அதிகரித்துள்ளது.

இந்தியாவையே ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் (Coronavirus Pandemic) இரண்டாவது அலை தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. இரண்டாவது அலையின் சீற்றம் மே மாதம் உச்சத்தில் இருந்தது. மே மாதம் மூன்றாவது வாரத்தில் மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் தொற்றின் அளவு அதிகரித்தது. 36,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு, ஊரடங்கு மற்றும் பல வித தொற்று பரவல் நடவடிக்கைகள் காரணமாக மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

கடந்த 45 நாட்களுக்கும் மேலாக கொரோனா ஒரு நாள் தொற்றின் அளவு இறங்கு முகத்தில் உள்ளது. கொரோனா ஊரடங்கில் கடுமையான நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டன. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், மக்களது நடமாட்டம் வெகுவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ள நிலையில், ஊரடங்கில் (Lockdown) பல வித தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை உட்பட சில மாவட்டங்களில் தொற்று கிட்டத்தட்ட இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது என்றே கூறலாம். இந்த நிலையில், கொரோனா தினசரி பாதிப்பு, சில மாவட்டங்களில் நேற்று இயல்பை வித அதிகமாக உயர்ந்திருப்பதைக் காண முடிந்தது. தொடர்ந்து மாவட்டங்களின் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், 15 மாவட்டங்களில் மட்டும் புதன்கிழமை இருந்ததை விட வியாழனன்று அதிகரித்துள்ளது.

related posts