Home கனடா தேவாலயங்களை எரிப்பதன் மூலம் நீதி கிடைக்காது – பழங்குடியினத் தலைவர்கள்

தேவாலயங்களை எரிப்பதன் மூலம் நீதி கிடைக்காது – பழங்குடியினத் தலைவர்கள்

by Jey

கத்தோலிக்க தேவாலயங்களை எரிப்பதன் மூலம் நீதி கிடைக்கப் போவதில்லை என பழங்குடியினத் தலைவர்களும் அரசியல்வாதிகளும் தெரிவித்துள்ளனர்.

கத்தோலிக்க தேவாலயங்களினால் நிர்வாகம் செய்யப்பட்ட வதிவிடப் பாடசாலைகளில் பழங்குடியின சமூகம் இனச்சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்படாத புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டமைக்கு பதிலடியாக தேவாலயங்களை தீக்கிரையாக்குவது நியாயமாகாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

நட்புறவினை கட்டியெழுப்பி மீளவும் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதே பழங்குடியின மக்களின் கலாச்சாரம் என பழங்குடியினத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மையில் சில கத்தோலிக்க தேவாலயங்கள் எரிக்கப்பட்டதுடன் சில தேவாலயங்கள் சேதப்படுதப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தேவாலயங்களை தீக்கிரையாக்குவது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

மத வழிபாட்டுத் தளங்கள் மீது தாக்குதல் நடாத்துவது முறையில்லை எனவும் இதனை உடன் நிறுத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

related posts