லைட்டோன் தீ விபத்தில் கிராம மக்கள் சிலரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டிஷ் கொலம்யாவின் லைட்டோன் நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் அண்மைய நாட்களில் கடுமையான வெப்பநிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நகரத்தின் சுமார் 90 வீதமான கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தீ விபத்தின் போது மக்கள் அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் சிலரைக் காணவில்லை என மேலும் குறிப்பிடப்படுகின்றது.
தீ விபத்திற்கு அஞ்சி மக்கள் பல்வேறு திசைகளிலும் தப்பிச் சென்றுள்ள நிலையில் விபத்தில் எவரேனும் சிக்கியுள்ளனரா என்பதனை கண்டறவதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.