Home இலங்கை பஸிலின் பாராளுமன்ற வருகை ஒத்தி வைப்பு? பின்வாங்கும் ராஜபக்சக்கள்

பஸிலின் பாராளுமன்ற வருகை ஒத்தி வைப்பு? பின்வாங்கும் ராஜபக்சக்கள்

by Jey

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகை பிற்போகக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

பஸில் ராஜபக்ச பாராளுமன்றம் வருவதாக இருந்தால் ஆளுங்கட்சி எம்.பியொருவர் பதவி துறக்க வேண்டும். அதன்பின்னர் பஸிலின் பெயர் பரிந்துரைக்கப்பட வேண்டும். அதனை உறுதிப்படுத்தி தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி வெளியிட வேண்டும்.

இவ்வாறான நடைமுறைகளால் ஜுலை நடுப்பகுதியிலேயே பஸில் பாராளுமன்றம் வரக்கூடும் என ஆளுங்கட்சி பிரமுகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று இன்று நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பஸில் ராஜபக்ச , நாமல் ராஜபக்ச, சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.

பஸில் ராஜபக்சவின் பாராளுமன்ற வருகை சம்பந்தமாகவே இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. எனினும், உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

related posts