அல்பர்ட்டா மாகாணத்தின் செஸ்டர்மியரில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மூன்று வயது வந்தவர்களும் நான்கு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.
அதிகாலை வேளையில் இடம்பெற்ற தீ விபத்தில் இந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த வயது வந்த ஒருவரும் நான்கு சிறார்களும் உயிர் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் இரண்டு முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என கல்கரி இமாம் அறிவித்துள்ளார்.
ஒரு குடும்பம் நீண்ட காலம் அல்பர்ட்டாவில் வாழ்ந்த வந்த்தாகவும், மற்றுமொரு குடும்பம் அண்மையில் ஒன்றாரியோவிலிருந்து கல்கரிக்கு இடம் மாறியதாகவும் தெரிவித்துள்ளார்.
தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.