Home கனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் திடீர் மரணங்களின் எண்ணிக்கை 719 ஆக உயர்வு

பிரிட்டிஷ் கொலம்பியாவில் திடீர் மரணங்களின் எண்ணிக்கை 719 ஆக உயர்வு

by Jey

பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் திடீர் மரணங்களின் எண்ணிக்கை 719 ஆக உயர்வடைந்துள்ளது என பிரதம திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

வெப்ப அலை காரணமாக இவ்வாறு மரணங்கள் பதிவாகி வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

கடந்த ஜூன் மாதம் 25ம் திகதி முதல் இந்த மாதம் 1ம் திகதி வரையில் இவ்வாறு அதிகளவில் திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் இது வழமையான திடீர் மரணங்களை விடவும் மூன்று மடங்கு அதிகமாகும்.

இந்த 719 திடீர் மரணங்களில் எத்தனை பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்தனர் என்பது இன்னமும் தெளிவாக கண்டறியப்படவில்லை.

இந்த திடீர் மரணங்களுக்கான காரணங்களை கண்டறியும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

related posts