Home இந்தியா மூலிகை இலையில் முக கவசம்

மூலிகை இலையில் முக கவசம்

by Jey

கொடைக்கானல் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள்,மூலிகை இலையில் முக கவசம் அணிந்து உலா வருகின்றனர்.கொரோனா பரவலை கட்டுப்படுத்த முக கவசம்அணிவது அவசியம் என அரசு வலியுறுத்துகிறது.

இருப்பினும், நம்மிடையே உள்ள பலர், அதை சுமையாக கருதி அணியாமல் திரிகின்றனர். ஆனால், காட்டுக்குள் இயற்கையோடு ஒன்றி வாழும் பழங்குடியினரோ, மூலிகை இலையை முக கவசமாக அணிந்து வலம் வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம்,பண்ணைக்காடு வடகரைபாறை மக்களிடம்தான் இந்த புது வழக்கம் உள்ளது. அவ்வூரைச் சேர்ந்த சிவா கூறியதாவது:இங்கு கொரோனா பாதிப்பு இல்லை. இருப்பினும் முக கவசம் அணியுமாறு அதிகாரிகள் கூறினர். வனப்பகுதியில் உள்ள பிசிலாம் மரத்தின் இலை, கிருமிகளை நம்மிடம் அண்ட விடாது என முன்னோர் கூறிஉள்ளனர். குழந்தைகளின் ஜலதோஷ பிரச்னைக்கு, இந்த இலை மற்றும் வெங்காயத்தை மாலையாக கோர்த்து அணிவிப்போம்.
விரைவில் சரியாகிவிடும். இந்த இலையின் மணம் நுரையீரல், சுவாசப் பாதைகளை துாய்மையாக பராமரிக்கும் என்பதால், வெளியில் செல்கையில் இதை முக கவசமாக அணிகிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

related posts