கொவிட் பெருந்தொற்று காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த கடுமையான எல்லைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்த்தப்பட உள்ளது.
கடந்த பதினாறு மாதங்களாக இந்த எல்லைக் கட்டுப்பாடு கடுமையான அளவில் அமுல்படுத்தப்பட்டிருந்தது.
முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்ட கனேடியர்கள் மற்றும் நிரந்தரமாக வதிவோர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் முதல் இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி ஏற்றப்பட்ட விபரங்கள் மற்றும் கொவிட் பரிசோதனை முடிவு என்பன குறித்த விபரங்கள் முன்கூட்டியே வழங்கப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.