கோவிட்டிற்கு எதிராக போராடி வரும் அனைத்து டாக்டர்கள், நர்சுகளுக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: இந்த ஆண்டு, டாக்டர்கள், நர்சுகள், பாராமெடிக்கல் துறையினருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இது தான், உயிரிழந்த டாக்டர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். தங்களின் உயிர் மற்றும் குடும்பத்தினரை பற்றி கவலைப்படாமல் பணியாற்றுபவர்களை கவுரவப்படுத்துவது போல் அமையும். ஒட்டுமொத்த நாடும், இதனால், மகிழ்ச்சி அடையும். இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.