Home கனடா ஒன்றாரியோவில் சிறார்கள் இரண்டாம் தடுப்பூசி மாத்திரைக்கு பதிவு செய்யலாம்

ஒன்றாரியோவில் சிறார்கள் இரண்டாம் தடுப்பூசி மாத்திரைக்கு பதிவு செய்யலாம்

by Jey

ஒன்றாரியோவில் 12 முதல் 17 வயது வரையிலான சிறார்கள் இரண்டாம் தடு;பபூசி மாத்திரைக்கு தங்களை பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் முதல் இவ்வாறு தடுப்பூசிக்காக முன்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் சிறார்களுக்காக பயன்படுத்தக் கூடிய ஒரே கொவிட் தடுப்பூசியாக படோடெக்-பைசர் தடுப்பூசி அங்கீகரிக்க்பபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒன்றாரியோ மாகாணத்தில் 78 வீதமான வயது வந்தவர்கள் குறைந்தபட்சம் ஒரு மாத்திரை தடுப்பூசியையேனும் பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 44 வீதமானவர்கள் இரண்டு மாத்திரைகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர் என மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.

related posts