கலைகள் பலவிதம், அதில் புதுமையை புகுத்தி உலக சாதனைகளை படைப்பதில் பலரும் ஆர்வம் கொண்டுள்ளனர். ஒரு மில்லியன் ஸ்டேப்லர் பின்களை பயன்படுத்தி ‘கர்ணன்’ திரைப்பட நடிகர் தனுஷின் ஓவியம் உருவாக்கப்பட்டுள்ளது.
சீவக வழுதி என்பவர் ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற தனுஷின் போஸ்டரை ஸ்டேப்லர் பின்னை வைத்து உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இதற்க்கு ‘கர்ணன்’ பட தயாரிப்பாளர் தாணு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள திரைப்பட தயாரிப்பாளர் தாணு, ”புதிய வரலாறுகளை கர்ணன் உருவாக்கிக் கொண்டிருக்கிறான், இன்னும் உருவாக்குவான், இந்த கலைப் படைப்பை வரைந்து சாதனை புரிந்த கலைஞர் சீவக வழுதிக்கு வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
“கொடியன்குளம்” கிராமத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் கர்ணன். 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படம் பல சாதனைகளை புரிந்துள்ளது.