பக்கரிங்கில் பிரன்ச்மென்ஸ் குடாவின் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று நீரில் நீந்திக் கொண்டிருந்த நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக டர்ஹம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
30 வயது மதிக்கத் தக்க நபர் ஒருவர் நீரில் நீந்திக் கொண்டிருந்த போது காணாமல் போய்விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் மீட்புப் படையினர் குறித்த நபரை மீட்டு முதலுதவி செய்த போதிலும் அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த நபரின் பெயர் விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.