மோதலை தவிர்க்க முயற்சித்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று கல்கரியில் இடம்பெற்றுள்ளது.
ஆண் ஒருவருக்கும் பெண் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான மோதலை தடுப்பதற்காக சென்ற ஒருவர் கடுமையான கத்தி குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 30ம் திகதி இந்த கத்தி குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்கரியில் ஜேம்ஸ் சோர்ட் பார்க்கில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவத்தினை மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.