றொரன்டோவில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்றைய தினமும் நாளையும் றொரன்டோவின் அநேக பகுதிகளில் அதிகளவான வெப்பநிலை நீடிக்கும் என கனேடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
பகல் வேளைகளில் 31 முதல் 34 பாகை செல்ஸியல் வரையில் வெப்பநிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் இரவு வேளையில் வெப்பநிலை 21 முதல் 23 பாகை செல்சியஸ் வரையில் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் நாளை இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக கனேடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.