அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சஸ்கட்ச்வான் கவுஸெஸ் பகுதிக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே விஜயம் செய்கின்றார்.
பழங்குடியின மக்கள் வாழும் கவுஸெஸில் 751 அடையாளம் காணப்படாத புதைகுழிகள் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்ததுடன் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பிரதமர் ட்ரூடேவுடன், மாகாண முதல்வர் ஸ்கோட் மோயியும் இணைந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சிறுவர் பராமரிப்பு தொடர்பிலான முக்கியமான உடன்படிக்கை ஒன்றில் பிரதமர் ட்ரூடே கைச்சாத்திட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நோக்கில் பிரதமர் கவுஸெஸிற்கு விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பழங்குடியின சிறுவர் மற்றும் குடும்ப விவகாரங்களை தாங்களே கையாளுவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள சமூகங்களில் கவுஸெஸ் சமூகமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.