பிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத் தீயினால் பாதிப்புக்கள் ஏற்படக் அபாயங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் ஒரு சில பகுதிகளில் காட்டுத் தீ புகையினால் பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வான்கூவர் பெரும்பாக பகுதியின் வானம் தற்போதைக்கு தெளிவாக இருக்கும் என்ற போதிலும் இதில் மாற்றம் ஏற்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு மற்றும் 2018ம் ஆண்டில் இடம்பெற்ற காட்டுத் தீ பரவுகைகளின் போது ஏற்பட்ட புகை சார் ஆரோக்கிய கேடுகள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கர்ப்பிணிப் பெண்கள், வயது முதிர்ந்தவர்கள், நாட்பட்ட நோய்களை உடையவர்கள், சிசுக்கள் மற்றும் சிறார்கள் இந்த பாதிப்புக்கள் குறித்து கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.