ஒன்றாரியோ மாகாணத்தில் இன்றைய தினம் கொவிட் மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.
கடந்த 2020ம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தின் பின்னர் இன்றைய தினம் இவ்வாறு கொவிட் மரணங்கள் எதுவும் பதிவாகாத முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒன்றாரியோவில் கொவிட் தொற்று உறுதியாளர்களின் மொத்த 200 ஐ விடவும் குறைவானது என தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினம் 194 கொவிட் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாகாணம் தழுவிய நோய்த் தொற்று உறுதியாளர் வீதம் 0.9மாக பதிவாகியுள்ளது.
நோய்த் தொற்று உறுதியானது முதல் இதுவரையில் ஒன்றாரியோவில் 546411 நோய்த் தொற்று உறுதியாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 9224 மரணங்களும் பதிவாகியுள்ளன.