கனடாவில் கொவிட் பெருந்தொற்றுடன் தொடர்புடைய பல்வேறு திரிபுகள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உலக நாடுகளில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள டெல்டா திரிபினைப் போன்ற பாதகமான லாம்டா திரிபும் கனடாவில் பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரையில் நாட்டில் லாம்டா வைரஸ் தொற்று உறுதியாளர்களின் எண்ணிக்கை குறைந்தளவில் காணப்படுகின்றது.
எனினும், இந்த நோய்த் தொற்று திரிபு பரவுகையானது ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த திரிபு 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேருவில் கண்டறியப்பட்ட போதிலும் கடந்த ஜூன் மாதமே இதனை ஓர் தனியான திரிபாக உலக சுகாதார ஸ்தாபனம் அடையாளப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.