தமிழக பாஜக தலைவராக இருக்கும் எல்.முருகன் மத்திய அமைச்சரவைக்கு தேர்வு செய்யப்பட்டதால் அந்த பதவிக்கு இந்திய காவல் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பாஜகவில் இணைந்த அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.
டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு எல். முருகன் பாஜக தலைவரானார். எல்.முருகன் மத்திய அமைச்சராக அறிவிக்கப்பட்டதும், மாநில தலைவர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் இருவருக்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது. இவர்கள் இருவரும் எம்.எல்.ஏவாக இருப்பதால் அண்ணாமலைக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.