றொரன்டோவில் கடுமையான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடி மின்னலுடன் கூடிய கடுமையான மழை பெய்யக்கூடிய சாத்தியம் உண்டு என கனேடிய சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினம் 30 முதல் 50 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் 50 மில்லி மீற்றரை தாண்டியும் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் வார இறுதியில் தெளிவான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.