இளைய தலைமுறையினர் கொவிட் தடு;ப்பூசி போட்டுக் கொள்வதில் நாட்டம் காட்டுவது குறைவு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இளையவர்கள் முதல் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதில் கூடுதல் நாட்டம் காட்டாத நிலைமை காணப்படுவதாக கனேடிய பிரதம பொதுச் சுகாதார பரிசோதகர் டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார்.
இளைய தலைமுறையினர் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் காட்டும் மந்த கதியினால் முதலாம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வயது முதிர்ந்தவர்களை விடவும் இளையோர் சமூகத்துடன் தொடர்படுவது அதிகம் என்பதனால் கொவிட் தொற்று அவர்களின் ஊடாக பரவக்கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடு;ப்பூசி ஏற்றிக் கொள்வதன் மூலம் நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.