Home இலங்கை தமிழ் மொழி புறக்கணிக்கப்படாது – சஜித்

தமிழ் மொழி புறக்கணிக்கப்படாது – சஜித்

by Jey

இனி தமிழ் மொழி தவறுதலாகக்கூட புறக்கணிக்கப்படாது எனவும் ஐக்கிய மக்கள் கூட்டணியில் மும்மொழி கொள்கை கடைபிடிக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமாகிய சஜித் பிரேமதாஸ உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்யும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக பல தடவைகள் பிரச்சினைகள் எழுந்தன. எனினும் அது சரிசெய்யப்படாது தொடர்ந்து புறக்கணிப்பு இடம்பெற்று வந்தது.

இதனால் ஐக்கிய மக்கள் சக்திக்குள் இருக்கும் கூட்டணி தமிழ் கட்சி தலைவர்களுக்கு அதிகளவான அழுத்தங்கள் சமூகத்தில் இருந்து பிரயோகிக்கப்பட்டது.

இதனையடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தொலைபேசி ஊடாக சஜித் பிரேமதாஸவை தொடர்பு கொண்டு தமிழ் மொழி புறக்கணிப்பு குறித்து கவலை வௌியிட்டார்.

இதனையடுத்து தமிழ் மொழி இனி புறக்கணிக்கப்பட மாட்டாது எனவும் மும்மொழி கொள்கை கடைபிடிக்கப்படும் எனவும் சஜித் பிரேமதாஸ உறுதி அளித்துள்ளார்.

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பின்வருமாறு கூறியுள்ளார்

“மகிழ்ச்சி..! ஆகவே விவகாரம் இத்துடன் முடிந்தது. இதற்கு முன்னும் இப்படி நிகழ்ந்தது. சொன்னேன். எப்போதும் எடுத்த எடுப்பிலேயே, “எடுத்தேன், கவிழ்த்தேன்”, என நான் அவசரப்படுவதில்லையே. அதேபோல், என்ன நடந்தாலும், வலிக்காததை போல் சும்மா இருப்பதும் இல்லையே. எங்கே, எப்போது, எப்படி, என்ன செய்யனும் என அனுபவம் எனக்கு கற்று கொடுத்திருக்கு.! எத்தனை பேரை கடந்து வந்த பட்டறிவு அனுபவம்..!”

related posts