Home இலங்கை பிரதமராக்கப்படுகின்றார் நாமல்

பிரதமராக்கப்படுகின்றார் நாமல்

by Jey

எதிர்வரும் சில வாரங்களுக்குள் முழுமையான அமைச்சரவை மாற்றம் ஒன்றை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுமையாக திறக்கப்பட்ட பின் விரைவான அபிவிருத்தியை முன்னெடுக்கும் நோக்கில் செயற்திறனற்ற அமைச்சர்கள் மாற்றப்பட்டு அரசாங்கத்திற்கு நற்பெயர் பெற்றுக் கொடுக்கக் கூடிய, அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய நபர்களை அமைச்சர்களாக நியமிக்க ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார்.

இதன்மூலம் நாட்டு மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான அவப்பெயரை நீக்கி நற்பெயர் பெறவும் ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார்.

அதன்படி சிரேஸ்ட அமைச்சர்கள் சிலர் அமைச்சரவையில் இருந்து அகற்றப்பட்டு அந்த இடத்திற்கு புதியவர்கள் நியமிக்கப்பட உள்ளதுடன் இளைய இராஜாங்க அமைச்சர்கள் சிலரை அமைச்சரவைக்கு உள்வாங்கவும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் பிரதான நோக்கம் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பது என கூறப்படுகிறது.

ஆனால் மிக விரைவில் இந்த மாற்றம் நிகழும் என தற்போது கூறப்படுகிறது. விசேடமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சு பதவியை விட்டுக் கொடுக்க பிரதான காரணம் நாமல் ராஜபக்ஷவிற்கு பிரதமர் பதவி வழங்க வேணடும் என்ற நிபந்தனைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதனால் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

related posts