கொத்தலாவல சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிக்க உள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.
கொத்தலாவல சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்படாவிட்டால் அதற்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் பிரதி தவிசாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திடம் தாம் இந்த கோரிக்கையை முன்வைத்த பின் சட்டமூலம் பிற்போடப்பட்டதாக அவர் கூறினார்.
ஏற்கனவே விமல் தலைமையிலான அணி அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.