சஸ்கட்ச்வானில் கொவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 நோய்த் தொற்று நிலைமை காரணமாக மாகாணம் முழுவதிலும் பல்வேறு சுகாதார கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது.
நோய்த் தொற்று காரணமாக 570 மாகாணம் தழுவிய மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசிகள் மீது கூடுதல் நம்பிக்கை கொண்டுள்ளதாக மாகாண முதல்வர் ஸ்கொட் மோய் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார கெடுபிடிகளை தளர்த்துவதற்கு மாகாண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கட்டம் கட்டமாக மாகாணத்தின் சுகாதார கெடுபிடிகள் தளர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.