Home உலகம் பிஜியில் தடுப்பூசி போடாவிட்டால் வேலை இல்லை

பிஜியில் தடுப்பூசி போடாவிட்டால் வேலை இல்லை

by Jey

தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பிஜியில் ”தடுப்பூசி போடாவிட்டால், வேலை இல்லை” என அந்த நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

ஒரு ஆண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி செலுத்துவதிலும், தயாரிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. ஒரு சில நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு சலுகைகள் மற்றும் பரிசுகளை அறிவித்து வருகின்றன. சில நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் மக்களை தடுப்பூசி போடுவதற்கு வற்புறுத்தி வருகிறது.

அவ்வகையில் தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான பிஜியில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன்படி பிஜி பிரதமர் பிராங்க் பைனிமராமா கூறுகையில், கொரோனா தடுப்பூசி போடாவிட்டால், அரசு வேலை இல்லை. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தங்கள் வேலையை இழக்க நேரிடும். ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக்கொள்ளாத அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள் என்றும், நவம்பர் 1ம் தேதிக்குள் இரண்டாவது டோஸ் செலுத்தப்படாவிட்டால், பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவித்து உள்ளார்.

related posts