மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகளை உ.பி., போலீசார் கைது செய்தனர்.
உ.பி.,யில் லக்னோவின் ககோரி பகுதியில் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் பதுங்கியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர்கள், அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்திற்கிடமான மினாஜ் அகமது மற்றும் மஸ்ருதீன் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள், லக்னோவில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது.
இதனையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களுக்கு பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் அன்சார் கஜ்வட் – உல்_ஹிந்த் அமைப்புடன் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளதாக, அம்மாநில போலீஸ் உயர் அதிகாரி பிரசாந்த் குமார் என்பவர் தெரிவித்தார்.