அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று (12) காலை முதல் Online கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகி, தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாக தெரிவித்து அடக்குமுறையை கையாளுதல் மற்றும் சம்பப் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் சாதகமாக பதிலளிக்கும் வரை தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என கல்வி தொழிற்சங்கங்களின் சம்மேளன தலைவர் உலபனே சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, Online கற்பித்தலில் இருந்து விலகும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தாம் ஆதரவளிக்கவில்லை என சுதந்திர ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.