களவாடிய கமரா ஒன்றுடன் செல்பி எடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
48 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெவர்டோனில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக களவாடிய கண்காணிப்பு கமராவுடன் செல்பி எடுத்து கொண்டுள்ளார்.
இந்த கண்காணிப்பு கமரா உரிமையாளருக்கு குறித்த பெண்ணின் படத்தை அனுப்பி வைத்துள்ளது.
இது தொடர்பில் கமரா உரிமையாளர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
5000 டொலருக்கு குறைந்த பெறுமதியுடைய உடமை என்ற காரணத்தினால் குறித்த பெண் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.