ஆப்கானிஸ்தானுக்கான உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும் என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கனடாவின் சர்வதேச அபிவிருத்தி குறித்த அமைச்சர் கரீனா கோல்ட் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள ஐக்கிய அமெரிக்க படையினர் வாபஸ் பெற்றுக் கொண்டதன் பின்னரும், கனடா உதவிகளை வழங்கும் என அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ம் திகதியுடன் அமெரிக்காவின் அமைதி காக்கும் பணிகள் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கோல்ட் தெரிவித்துள்ளார்.
சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தொடர்ந்தும் நிலைமைகளை அவதானித்து உதவிகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.