பிரிட்டிஷ் கொலம்பியாவில் மற்றுமொரு புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Penelakut தீவுகளின் வதிவிடப் பாடசாலை வளாகத்தில் இந்த புதைகுழிகள் மீட்கப்பட்டுள்ளன.
சுமார் 160 புதைகுழிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் கல்லறை கற்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
1890ம் ஆண்டு முதல் 1975 ஆண்டு வரையில் கத்தோலிக்க தேவாலயங்களினால் இந்த பாடசாலை நிர்வாகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை ஓர் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையாகவே கருதுவதாக பழங்குடியின மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த வதிவிடப்பாடசாலையில் சிறுவர்கள் மீது பாலியல் குற்றச் செயல்கள் இடம்பெற்றிருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.