கனேடிய சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கனேடிய சுற்றுலாப் பயணிகளுக்கு தங்களது எல்லைகளை திறப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
இதேவிதமாக பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகளுக்கும் கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பெருந்தொற்று நிலைமை ஏற்பட்டது முதல் கனடாவிற்கு வெளிநாட்டுப் பயணிகள் பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லைகளை தொடர்ச்சியாக மூடியிருப்பது பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என பிரான்ஸ் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.