கெலவ்னா பலுதூக்கி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து ஆக உயர்வடைந்துள்ளது.
கட்டிட நிர்மானத்திற்காக பயன்படுத்தப்படும் பலுதூக்கியொன்றே இவ்வாறு உடைந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடுமையான முயற்சியின் பின்னர் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஒவ்வொன்றாக மீட்டு எடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் நான்கு பேர், பலுதூக்கி வீழ்ந்த அலுவலகத்தில் கடமையாற்றிய துணை ஒப்பந்தக்கார்ர்கள் எனத் தெரியவந்துள்ளது.
ஏனைய உயிரிழந்த நபர் கட்டடத்திற்கு அருகாமையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.