Home கனடா பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் – கனேடிய மத்திய வங்கி

பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் – கனேடிய மத்திய வங்கி

by Jey

பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் என கனேடிய மத்திய வங்கி அறிவித்துள்ளது.

முன்னர் எதிர்பார்க்கப்பட்டதனை விடவும் ஓர் சிறியளவு குறைவு பொருளாதார வளர்ச்சியில் காணப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது.

6.5 வீத பொருளாதார வளர்ச்சி பதிவாகும் என எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது பொருளாதார வளர்ச்சி 6 வீதமாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2022ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 4.6 வீதமாக காணப்படும் என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

கொவிட் பெருந்தொற்று நிலைமையினால் நாடு முடக்கப்பட்டிருந்த காரணத்தினால் நுகர்வோர் செலவுகள் வரையறுக்கப்பட்டிருந்ததாகவும் எதிர்வரும் காலங்களில் இந்த நிலையில் மாற்றம் ஏற்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

related posts