Home உலகம் கொவிட் தடுப்பூசிக்கு எதிராக பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்

கொவிட் தடுப்பூசிக்கு எதிராக பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்

by Jey

கொவிட் தடுப்பூசி செயற்திட்டத்திற்கு எதிராக பிரான்ஸில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்கள் உட்பட ஏனைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் மாத்திரமே நுழைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொண்டதற்கான சான்றிதழை சமர்ப்பிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்களுக்கு எதிராகவே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர்புகை மற்றும் நீர்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மேனுவேல் மெக்ரோன் கலந்துகொண்ட நிகழ்விலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பினர். அரசாங்கம் முன்வைத்துள்ள ஆலோசனைகளுக்கு அவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

related posts