மானிடோபாவின் பழங்குடியின அமைச்சர் எய்லின் கிளார்க் ( Eileen Clarke) பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மாகாண முதல்வர் பாலிஸ்டரின் கருத்து தொடர்பில் அதிருப்தி வெளியிட்டு இவ்வாறு பதவி விலகியுள்ளார்.
காலணித்துவ குடியேற்றங்கள் தொடர்பில் முதல்வர் பாலிஸ்டர் வெளியிட்ட கருத்துக்கள் பழங்குடியின விவகார அமைச்சர் கிளார்க் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்த நாட்டுக்கு குடியேறியவர்கள் நாட்டை அழிக்கவில்லை எனவும் நாட்டைக் கட்டியெழுப்பியதாகவும் முதல்வர் கருத்து வெளியிட்டிருந்தார்.
அமைச்சரவை அமைச்சர்கள் தங்களது எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்க வேண்டுமெனவும், கிளார்க்கின் பதவி விலகலை ஏற்றுக் கொள்வதாகவும் முதல்வர் பாலிஸ்டர் தெரிவித்துள்ளார்.