முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரணைப்பாலை பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிக்காத நிலையிலான பாரிய வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
யுத்த காலத்தில் வீசப்பட்ட குண்டாக இது இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கண்டுபிடிக்கப்பட்ட குண்டு சுமார் 250 கிலோவிற்கும் அதிக நிறைகொண்டதென தெரிவிக்கப்படுகிறது.
குண்டை அகற்றுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.