Home உலகம் ஸ்பெய்னில் முடக்க நிலை அரசியல் அமைப்பிற்கு எதிரானது – நீதிமன்றம்

ஸ்பெய்னில் முடக்க நிலை அரசியல் அமைப்பிற்கு எதிரானது – நீதிமன்றம்

by Jey

கொரோனா தொற்று பரவலை அடுத்து, ஸ்பெயினில் கடந்த வருடம் அமுல்படுத்தப்பட்ட முடக்கல் நிலையானது அரசியலமைப்பிற்கு முரணானது என அந்நாட்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம் விதிமுறைகளை மீறியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்தை மீட்டெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் திபதி நாட்டில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டதுடன், மக்கள் வீடுகளிலிருந்து வௌியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வௌியேற முடியும் என அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கேற்றவாறு வர்த்தக நிலையங்கள் திறந்திருக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

அத்துடன் ஸ்பெயினில் அவசர நிலை, விதிவிலக்கு நிலை மற்றும் முற்றுகை நிலை ஆகியன பிரகடனப்படுத்தப்பட்டன.

இவ்வாறான விதிமுறைகள், உரிமைகளை மீறும் அடக்குமுறைகளாகவே காணப்படுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

related posts