தென்னாபிரிக்காவில் ஆர்ப்பாட்டம் உக்கிர நிலையை அடைந்துள்ளது. தென்னாபிரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜெகப் சுமா கைது செய்யப்பட்டதையடுத்து தென்னாபிரிக்காவில் வன்முறைகள் ஆரம்பமாகின. இராணுவத்தினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. இதனால் இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் வர்த்தக நிலையங்கள் மற்றும் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். சிலர் வர்த்தக நிலையங்களை கொள்ளையிட்டுள்ளதாகவும் தென்னாபிரிக்கா தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இராணுவ வீரர்கள் 25 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.