பிரிட்டிஷ் கொலம்பியாவில் அவசரகால நிலையை அறிவிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மாகாணத்தில் கடுமையான காட்டுத் தீ பரவி வரும் நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காட்டுத் தீ நிலைமைகளினால் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரக் கணக்கானவர்கள் வீட்டுக்குள்ளேய முடங்கிக் கிடக்க நேரிட்டுள்ளது.
மாகாணத்தின் ஆறு இடங்களில் அவசரநிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கம் மாகாணம் தழுவிய அவசர காலநிலையை பிரகடனம் செய்வதற்கு இதுவரையில் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.