நாட்டில் பயணத்தடை உத்தரவில் மேலும் தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டு சூதாட்ட நிலையம் உள்ளிட்ட பல செயற்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, மதஸ்தளங்கள், விலங்குகள் சரணாலயம், விளையாட்டு போட்டிகள், குழு விளையாட்டு, சிறுவர் பூங்கா, தங்குமிடம், களியாட்ட முகாம் மற்றும் அரங்கிற்குள் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி என்பவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் விடிய விடிய இசை நிகழ்ச்சி மற்றும் இசை களியாட்டங்கள் நடத்த தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது.