மாகாண ரீதியான தடுப்பூசி கடவுச்சீட்டு முறைமையில் உடன்பாடு கிடையாது என ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
பிளவடைந்த சமூகமாக இருப்பதில் உடன்பாடு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாகாண ரீதியில் தனித் தனியாக கடவுச்சீட்டு அறிமுகம் செய்வது பிளவினை வெளிப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் ஆவணங்கள் மோசடி செய்யப்படக் கூடிய சாத்தியம் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், டிஜிட்டல் கடவுச்சீட்டை அறிமுகம் செய்யும் உத்தேசம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் எவ்வாறான தீர்மனம் எடுக்கின்றது என்பது கவனிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.