பேலியகொடை பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 43 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேலியகொட கெமுனு மாவத்தை பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கு இடையிலான மோதலை அடுத்து குறித்த பெண் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்து பொலிஸ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த பெண் இருதய நோயினால் பாதிக்கப்பட்டவர் எனவும் அது குறித்து அவரும் ஏனைய சந்தேக நபர்களும் பொலிஸாருக்கு அறிவித்த போதும் அவரை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்க பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இருதய நோய் அதிகரித்து சிறைக்கூடத்தில் இருந்தது பெண் சத்தமிட்ட போது பொலிஸார் குறித்த பெண்ணை வாயை மூடிக்கொண்டு இருக்குமாறு உத்தரவிட்டதாக ஏனைய சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த மூன்று பிள்ளைகளின் தாயான பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.