Home கனடா தடுப்பூசி ஏற்றுகையை ஊக்கப்படுத்தும் நோக்கில் பரிசு வழங்கும் கியூபெக் நிர்வாகம்

தடுப்பூசி ஏற்றுகையை ஊக்கப்படுத்தும் நோக்கில் பரிசு வழங்கும் கியூபெக் நிர்வாகம்

by Jey

மக்கள் மத்தியில் தடுப்பூசி ஏற்றுவதனை ஊக்கப்படுத்தும் நோக்கில் பரிசு வழங்கும் திட்டங்களை கியூபெக் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இரண்டு மில்லியன் டொலர்கள் இவ்வாறு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாகாண அரசாங்கம் தெரிவித்துள்ளது.

18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரு மில்லியன் டொலர் வரையில் வெற்றியீட்ட வாய்ப்பு உண்டு எனவும் 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்கு 20000 டொலர்கள் வரையில் பரிசு வென்றெடுக்கக் கூடிய சாத்தியம் உண்டு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தடுப்பூசி ஏற்றிக் கொள்வோருக்கு இவ்வாறு பணப் பரிசில்களை வழங்கி ஊக்குவிப்பதன் மூலம் மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றிக் கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி லொத்தர் சீட்டிலுப்பு குறித்த விபரங்களை சுகாதார அமைச்சர் Christian Dubé  ஊடகங்களிடம் அறிவித்துள்ளார்.

related posts