பிரிட்டிஷ் கொலம்பியாவில் நிலவி வரும் வெப்பத்துடனான காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 808 ஆக உயர்வடைந்துள்ளது என திடீர் மரண விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜூன் மாதம் 25ம் திகதி முதல் ஜூலை மாதம் 1ம் திகதி வரையில் இவ்வாறு வெப்பம் காரணமாக மாகாணத்தில் மரணங்கள் பதிவாகியுள்ளன.
மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வெப்ப நிலை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூன் மாதம் 29ம் திகதி லைட்டன் கிராமத்தின் வெப்பநிலை 46.9 பாகை செல்சியஸாக பதிவாகியிருந்தது.
குறித்த நாளில் மட்டும் மாகாணத்தில் 300 வெப்ப அலை மரணங்கள் பதிவாகியிருந்ததாக திடீர் மரண விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த அனைத்து மரணங்கள் தொடர்பிலும் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும் மரணத்திற்கான மெய்யான காரணங்கள் கண்டறிவதற்கான இவ்வாறு விசாரணை நடாத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.